
'மெர்சல்' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தளபதி 62'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் போஸ்டர்களை வடிவமைப்பதற்காக, பிரபல டிசைனர்களில் ஒருவரான கோபி பிரசன்னாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.
முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி', 'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களுக்கு, கோபி பிரசன்னா வடிவமைத்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 10, 2018 4:13 PM #THALAPATHY62 #VIJAY #தளபதி62 #விஜய் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories