சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பர்ஸை திருடும் நிதி அமைச்சக அதிகாரி..வைரல் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 01, 2018 06:37 PM
பாகிஸ்தானின் இஸ்லாமாத்தில் நடந்த அந்நிய முதலீட்டாளர்கள் மாநாட்டில், குவைத் நாட்டு அதிகாரியின் பர்ஸை திருடிய பாகிஸ்தான் அதிகாரி சிசிடிவி-மூலம் பிடிபட்ட காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விழாவில் குவைத் நாட்டு அதிகாரி அமர்ந்திருந்த மேஜை மீது ஒரு பர்ஸ் இருந்தது. இதனை முதலில் அங்கு சென்று பார்து உறுதி செய்துகொண்ட, பாகிஸ்தான் நிதி அமைச்சகத்தின் முதலீடு வாரியத்தின் செயலாளர் ஜரார் ஹைதர் கான், பிறகு சுற்றுமுற்றும் பார்த்து அடுத்த நொடியே பர்ஸை லாவகமாக எடுத்து தனது கோர்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டுவிட்டு போய்விட்டார்.
சிறிது நேரத்தில் பர்ஸை பறிகொடுத்த குவைத் அதிகாரி, பர்ஸை காணவில்லை என்று சொல்லவும், அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளும் தேடியுள்ளனர். அப்போதும் அமைதியாக அங்கேயே நின்றுகொண்டிருந்த ஜரார், இறுதியில் சிசிடிவியை பரிசோதனை செய்தபோது மாட்டிக்கொண்டார். பின்னர் அந்நாட்டு அரசு அவரை கைது செய்தது. அவர் பர்ஸை திருடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
Grade 20 GoP officer stealing a Kuwaiti official's wallet - the official was part of a visiting delegation which had come to meet the PM pic.twitter.com/axODYL3SaZ
— omar r quraishi (@omar_quraishi) September 28, 2018