'5,00,000 பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு'... கூகுள் பிளஸ் நிரந்தர மூடல்!
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 09, 2018 12:16 PM
இணைய உலகைப் பொறுத்தவரையில் கூகுள் நிறுவனம் தனிப்பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கூகுள் பிளஸ், கூகுள் மேப்ஸ்,ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அந்நிறுவனம் வழங்கி வருகிறது.
உலகம் முழுவதும் ஏராளமான பயனாளர்கள் இந்த சேவைகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கூகுள் பிளஸ் சேவையைப் பயன்படுத்தி வந்த 5,00,000 பயனாளர்களின் தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கூகுள் பிளஸ் சேவையை மூடுவதாக நேற்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தகவல்கள் திருடு போயினாலும் அதனை யாரும் தவறாகப் பயன்படுத்தவில்லை என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடு போன விவகாரம் மார்ச் மாதமே கூகுள் நிறுவனத்துக்கு தெரியும் என்றும், இது வெளியில் தெரிந்தால் கடும் விமர்சனங்களையும்,சட்டரீதியான நடவடிக்கைகளையும் சந்திக்க நேரிடும் என்பதால் அதனை வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டதாகவும் பிரபல ஆங்கில பத்திரிகையான 'தி வால் ஸ்ட்ரீட் ஜன்னல்' குற்றம் சாட்டியுள்ளது.