தலையை கையில் ஏந்தியபடி நடந்துவரும் சிறுமி: இணையத்தில் பரவும் வைரல் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 01, 2018 06:46 PM
உடலின் மேல் பாகத்தில் இருக்க வேண்டிய தலையை கைகளில் வைத்தபடி, சிறுமி ஒருவர் நடந்து வருவதுபோல் தெரியும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிலிப்பைன்ஸின் பாரான் நகரைச் சேர்ந்த 2 வயது சிறுமியின் தாய் கிறிஸ்டல் ஹ்வாங். மாயா என்கிற தன் 2 வயது பெண்குழந்தைதான் தன் தலையை தானே கைகளில் வைத்துக்கொண்டு, தனது 6 வயது சகோதரி சர்ளியுடன் நடந்து வரும் வீடியோ பிரபலமாகியுள்ளது. உடனே பல்வேறு சேனல்களும் கிறிஸ்டியிடம் கேட்டு தத்தம் சேனல்களில் இந்த வீடியோவை ஒளிபரப்பவும் வீடியோ ஏர்-டிராஃபிக்கை உருவாக்கி பெருமளவில் வைரலாகி வருகிறது.
முகத்தை பேய்கள் போல் அகோரமாக அலங்காரம் செய்துகொண்டும், அதற்கேற்ற காஸ்டியூம் அணிந்துகொண்டும் கொண்டாடப்படும் மேற்கத்திய உலகின் இந்த குறிப்பிட்ட ஹாலோவின் கான்செப்ட் படி, மாயாவின் தலையை அவளது கையில் வெட்டிக் கொடுத்த கசாப்பு கடைக்காரர்தான் அவரது சகோதரியாம். ஹாலோவின் பண்டிகைகள் களைகட்டும் நேரத்தில் இப்படி ஒரு வீடியோ வலம் வந்தது முதலில் பலரையும் அதிர்ச்சி அடைய வைக்கவும், பின்னர் வைரலாகவும் செய்திருக்கிறது.
My super adorable headless little Maya 😍 #halloween #halloween2018 #halloweencostume #kids #toddlers #headless pic.twitter.com/qVL8gthd77
— Krystel Hwang (@krystelhwang) October 29, 2018