தனக்கும், கமலுக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை என நடிகை கவுதமி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-
கமல்ஹாசனுடன் இணைந்து நான் செயல்படுவதாக வரும் செய்திகளை அறிந்து வேதனை அடைந்தேன். அவருடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில்ரீதியாகவோ எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை.
கடந்த 2016 அக்டோபர் மாதம் அவரை விட்டு நான் விலகி வந்ததில் இருந்து எனக்காகவும், எனது மக்களுக்காகவும் நான் கடுமையாக உழைத்து வருகிறேன். கமலுடன் இணைந்து வாழ்ந்தபோது அவருடைய ராஜ்கமல் நிறுவனத்துக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினேன்.
ஆடை வடிவமைப்பாளர் வேலைதான் எனக்கு அடிப்படை வருமானமாக இருந்தது. ஆனால் கமலின் தசாவதாரம், விஸ்வரூபம் படங்களுக்காக எனக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் இன்னும் நிலுவையில் உள்ளது.
கமல்ஹாசனிடம் ஏற்பட்ட மாற்றங்களும், சுமரியாதையை இழக்கக்கூடாது என நான் முடிவெடுத்ததும் தான் நாங்கள் பிரியக்காரணம்.
Past is past – and there are reasons for it. https://t.co/l4o8Vj4IS0
— Gautami (@gautamitads) February 24, 2018
BY MANJULA | FEB 26, 2018 1:46 PM #GAUTAMI #KAMALHAASAN #கவுதமி #கமல்ஹாசன் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS