BGM 2019 All Banner

எந்த இடம் 'வலி கண்டாலும்' கண்ணுதானே கலங்கும்...வைரல் புகைப்படம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 21, 2018 12:05 PM
#GajaCyclone: This Father-Son pic winning hearts in Social medias

கஜாவின் கோரத்தாண்டவம் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை முற்றிலும் அழித்துச் சென்று விட்டது. இந்த பாதிப்பில் இருந்து, டெல்டா மக்கள் மீண்டு வர இன்னும் 10-15 ஆண்டுகள் ஆகும் என கூறுகின்றனர்.

 

பெற்ற பிள்ளை காப்பாற்றாவிட்டாலும் வளர்த்த பிள்ளை கைவிடாது என்பதற்கு ஆதாரமாகத் திகழ்ந்த தென்னம் பிள்ளைகள், ஒரே நாளில் வீழ்ந்து எல்லா நம்பிக்கைகளையும் பொய்த்து போகச்செய்து விட்டன.

 

இதனை நம்பி வாழ்வை கழித்து வந்த ஏழை விவசாயிகள், இதனை அடமானமாக வைத்து கடன் வாங்கிய விவசாயிகள், மகன்-மகளின் படிப்பு செலவிற்கு இதையே ஆதாரமாகக் கொண்டிருந்த விவசாயிகளின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது.

 

இந்தநிலையில் தோப்பில் வீழ்ந்து கிடைக்கும் தென்ன மரங்களுக்கு மத்தியில், ஒருவரை-ஒருவர் அணைத்துக்கொண்டு நிற்கும் அப்பா-மகன் புகைப்படம் காண்பவரின் நெஞ்சை கண்கலங்கச் செய்து வருகிறது.

 

கவலைப்படாதப்பா என தந்தை-மகனுக்கு ஆறுதல் கூறுகிறாரா? இல்லை நான் இருக்கேன்பா என மகன்-தந்தைக்கு ஆறுதல் சொல்கிறாரா? என்பது தெரியவில்லை.

 

'ஊருக்கே சோறு போடும் லட்சக்கணக்கான விவசாயிகளும்  இந்த துயரத்திலிருந்து மீண்டுவர வேண்டும் என நாம் அனைவரும் பிரார்த்திப்போம்..