WATCH VIDEO: 'சென்னை மட்டும் தமிழகம் அல்ல'.. எங்களையும் கொஞ்சம் கவனிங்க!
Home > News Shots > தமிழ்By Manjula | Nov 18, 2018 08:56 PM
தஞ்சை,திருவாரூர் மாவட்டங்களில் கஜா கோரத்தாண்டவம் ஆடிவிட்டு சென்றுள்ளது. குறிப்பாக பயிர்கள், தென்னை மரங்கள், கால்நடைகள் என மக்களின் வாழ்வாதாரத்தினை அடியோடு அழித்துள்ளது.
இதனால் மின்சாரம், தண்ணீர், உணவு இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் சிக்குண்டபோது, வர்தா கோரத்தாண்டவம் ஆடிய சமயங்களில் மற்ற மாவட்ட மக்கள் அனைவரும் இணைந்து சென்னையையும், சென்னை மக்களையும் வீழ்ந்து விடாமல் பாதுகாத்தனர்.
இந்தநிலையில் தற்போது வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் டெல்டா மக்களுக்கு மற்ற மாவட்ட மக்கள் உதவி செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
அனைத்து மக்களும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்...
பேராவூரணி களநிலவரம் @news7tamil @CNNnews18 @PTTVOnlineNews #GajaCycloneUpdate #peravurani pic.twitter.com/xCwJSrauYh
— Rajasekaran.PK (@evandaRS) November 17, 2018