"இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்"...பிரதமரானார் முன்னாள் அதிபர் ராஜபக்சே!
Home > News Shots > தமிழ்By Jeno | Oct 26, 2018 10:20 PM
இலங்கை பிரதமராக இருந்து வந்த ரணில் விக்கிரம சிங்கே, பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்த அதிரடி அரசியல் மாற்றம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திபால சிறீசேனா அதிபராக இருந்து வருகிறார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்து வந்தார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி இன்று திடீரென உடைந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு எதிரான சிறிசேன ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ரணில் விக்கிரம சிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றது.
இதனையடுத்து அதிரடி மாற்றமாக,இலங்கை சுதந்திரா கட்சியின் முன்னாள் தலைவராகவும் முன்னாள் அதிபராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். அதிபர் மைத்திபால சிறீசேனா முன்னிலையில் ராஜபக்சே அவர் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார்.