கேங்ஸ்டர்களை பற்றிய புத்தகத்தை வெளியிட்ட முன்னாள் கேங்ஸ்டர் சுட்டுக்கொலை!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 21, 2018 11:31 AM
டென்மார்க்கின் புகழ்பெற்ற பாதாள உலக தாதாக்களை பற்றிய புத்தகத்தை வெளியிட்ட ரேடியோ ஜாக்கி சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி பேரலையை உண்டுபண்ணியிருக்கிறது.
டேனிஷ் பாதாள தாதா உலகின் மிக பிரபலமான தாதா மற்றும் கடத்தல்கார குழுவான லாஸ் கிரோரஸில் முந்தைய உறுப்பினராக இருந்த நதிம் யாசர் 31 வயதில் அதில் இருந்து வெளிவந்து ரேடியோ ஜாக்கியாக பாதாள உலகை பற்றிய முழு தகவல்களையும் அனுபவமாகவும், தன் நினைவுகளாகவும் பகிர்ந்தவர் பின்னர் ரூட்ஸ் என்றொரு புத்தகத்தில் அந்த கடத்தல் கேங்ஸ்டர் உலகத்தை பற்றி துல்லியமாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
ஆனால் புத்தகத்தை வெளியிட்ட உடனே, அடுத்த சில மணிநேரங்களிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 4 வயதில் டென்மார்க்குக்கு வந்த துருக்கியை சேர்ந்த நதிம் யாசர், இதே கேங்ஸ்டர்களால் பாதிக்கப்பட்ட பின் அதில் இருந்து வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.