'சொந்த அணியினை வீழ்த்த'.. இந்தியாவிற்கு 'டிப்ஸ்' கொடுத்த முன்னாள் வீரர்!
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 21, 2018 02:29 PM
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இது தான் சரியான தருணம் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கில்லஸ்பி தெரிவித்துள்ளார்.
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 இன்று பிர்ஸ்பேனில் நடைப்பெற உள்ளது.ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாதது,ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை டெஸ்ட் கோப்பையை இந்தியா வென்றது இல்லை,என பல காரணங்கள் இருப்பதால் தற்போது நடக்கவிருக்கும் போட்டிகள் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி கடுமையான தோல்விகளை சந்தித்து வருகிறது.முன்னணி வீரர்கள் இல்லாதது,இளம் வீரர்கள் தங்களின் ஆட்ட திறனை முழுமையாக பயன்படுத்தமால் இருப்பது என பல காரணங்கள் ஆஸ்திரேலியவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.இது போன்ற அனைத்து காரணங்களையும் ஒருங்கணைத்து இந்திய விளையாடினால் ஆஸ்திரேலியவை எளிதாக வெல்லலாம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் "எல்லோருக்கும் அவரவர் அணி தான் வெல்ல வேன்டும் என்பது ஆசையாக இருக்கும்.அதே போல தான் எனக்கும்.ஆனால் உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியவை வீழ்த்துவதற்கு இதுதான் சரியான தருணம்.தற்போது ஆஸ்திரேலியா வலுகுறைந்த அணியாக இருப்பதால் அதன் வீரர்கள் எதிராணியிடம் அவ்வளவாக வம்பிழுக்க மாட்டார்கள்.அதோடு இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினாலே எளிதாக வென்று விடலாம்” வீரர் ஜேசன் கில்லஸ்பி என தெரிவித்துள்ளார்.