முதல்முறையாக, சர்வதேச இந்திய அணியில் ஒன்றாக களமிறங்கும் இந்த சகோதரர்கள்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Feb 05, 2019 04:38 PM
இந்தியா - ஆஸ்திரேலிய இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வரலாறு காணாத மாபெரும் வெற்றியை கைப்பற்றியது.
அதன் பிறகு நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி நியூஸிலாந்துடன் 5 ஒருநாள் போட்டி முடிந்துள்ள நிலையில், அடுத்து 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
முன்னதாக ஒருநாள் போட்டிகளில், 4-1 என்கிற கணக்கில், நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. அதற்கும் முன்பாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய பேச்சை பேசியதால் ஹர்திக் பாண்ட்யா ஆஸ்திரேலிய போட்டிகளின்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் நியூஸிலாந்து போட்டிகளில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் போட்டிகளில் தற்போது ஆடும் ஹர்திக் பாண்ட்யா தன் மீது விழுந்த கறைகளை மறக்கச் செய்யும் வகையில் அதிரடியான பந்து வீச்சு, விக்கெட்டுகளை கைப்பற்றுவது, சிக்ஸர் அடித்து பேட்டிங்கில் ஸ்கோர் செய்வது என அமர்க்களப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நாளை (பிப்ரவரி 06) முதல் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட ஹர்திக் பாண்ட்யா தகுதி பெற்றுள்ளார். முன்னதாக க்ருணல் பாண்ட்யா விளையாடுவார் என்று அறியப்பட்ட நிலையில், இருவரும் இணையும் முதல் சர்வதேச போட்டியாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாண்ட்யா சகோதரர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஒரே அணியில் விளையாடியுள்ளனர்.
இதேபோல், யூசப் பதான் - இர்பான் பதான், மற்றும் மொஹிந்தர் அமர்நாத் - சுரிந்தர் அமர்நாத் சகோதரர்கள் உள்ளிட்ட பலரும் ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே அணியில் விளையாடியுள்ளனர்.