
கடந்த சனிக்கிழமை துபாயில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல், மும்பையில் உள்ள செலபரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.
காலை முதலே செலபரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் வரத்தொடங்கிய இந்தி நடிகர்கள் சஞ்சய் கபூர், ஹர்ஷவர்தன் கபூர், நடிகைகள் பராஹ்கான், சோனம் கபூர், ரியா கபூர், ஹேமமாலினி, இஷா தியோல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக சல்மான்கான், அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் நேற்று இரவு லோகந்த்வாலா பகுதியில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலான புகைப்படங்களுக்கு கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.
BY SATHEESH | FEB 28, 2018 11:12 AM #SRIDEVI #FUNERAL #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories