ஃபிபா 2018: மைதானத்தில் உருண்டு நெய்மர் 'வீணடித்த நிமிடங்கள்' எவ்வளவு தெரியுமா?
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 06, 2018 01:43 PM

21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகின்றன. அர்ஜெண்டினா, போர்ச்சுகல், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட முன்னணி அணிகள் வெளியேறியதால், இந்த ஆண்டு கோப்பை வெல்லப் போவது யார்? என ரசிகர்கள் நகத்தைக் கடித்தபடி காத்துக் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் நடப்பு கால்பந்து தொடரில், 14 நிமிடங்களை வீணடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் தொலைக்காட்சி நிறுவனமொன்று சமீபத்தில் ஆய்வொன்றை நடத்தியது. அதில் நெய்மர் பங்கேற்ற 4 போட்டிகளிலும், சுமார் 14 நிமிடங்களை அவர் கீழே விழுந்து வீணடித்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் என்மீதான விமர்சனங்கள் குறித்து நான் கவலை கொள்வதில்லை, எனது பணி களமிறங்கி சக வீரர்களுக்கு உதவுவதே என, நெய்மர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
