‘எவ்வளவு நேரமா போன் பேசுவ?’.. 16 வயது மகளுக்கு தந்தை கொடுத்த கொடூர தண்டனை!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 02, 2019 06:23 PM
செல்போன் மோகத்தால் அதிக நேரம் செல்போனிலேயே நேரத்தை போக்கும் பழக்கம் இருந்த மகளை தந்தை தீயில் இட்டு பொசுக்கியுள்ள சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் கிழக்கு விரார் பகுதியைச் சேர்ந்த தினக்கூலி முஹமது முர்துஸா மன்ஸூரி என்பவர். மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் இவர், தனது 16 வயது மகள் சாயிஷ்டாவின் அறைக்குச் சென்றுள்ளார். அங்கு சாயிஷ்டா வெகுநேரமாக ஆண் நண்பர் யாருடனோ போன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அதை பார்த்த முஹமது முர்துஸா ஆத்திரம் கொண்டுள்ளார்.
உடனே அவர் தன் மகளிடம் இருந்து செல்போனை பிடுங்கி ஓங்கி, தரையில் போட்டு உடைத்துள்ளார். மேலும் ஆத்திரம் தீராமல், அருகில் இருந்த மண்ணென்னை கேனை எடுத்து மகள் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
மகள் தீயினில் பொசுங்கி எரிவதை பார்த்து முர்துஸாவின் மனைவி துடித்து அலறியதும், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சாயிஷ்டாவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்
உடலில் தீக்காயத்துடன் மகள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பெற்ற மகளின் மீது கொலை முயற்சி செய்த இந்த தந்தையை, பிரிவு எண் 307-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.