
திண்டுக்கல்லில், ஃபேஸ்புக் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் பணிபுரியும் கார்த்திக் தனது சொந்த ஊரான திண்டுக்கல் பிள்ளையார் பாளையம் திரும்பி வந்ததும், தனது ஃபேஸ்புக் நண்பரான தளபதிக்கு ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
இந்த பதிவு தொடர்பாக இருவருக்கும் இடையே பேஸ்புக் பக்கத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், கார்த்திக் வீட்டிற்கு சென்ற தளபதி அவரை வெளியே அழைத்துச் சென்று ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
கார்த்திக்கை மீட்ட பொதுமக்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகவும், தப்பியோடிய தளபதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
BY SATHEESH | MAR 5, 2018 10:01 AM #FACEBOOK #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories