அமெரிக்க முன்னாள் அதிபர்கள் வீடுகளில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 25, 2018 10:52 AM
Explosive devices sent to Clinton, Obama houses

அமெரிக்க முன்னாள் அதிபர்களான  பில் கிளிண்டன் மற்றும் ஒபாமா வீடுகளுக்கு அனுப்பப்பட்ட பார்சலில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது கிளிண்டனும், ஹிலாரியும் வீட்டில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நியூயார்க் நகரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் சாப்பாகுவாவில் அமைந்துள்ள கிளிண்டனின் வீட்டில் கடிதங்களை ஸ்கேன் செய்யும்போது தொழில்நுட்பவியலாளர் ஒருவர் இந்த வெடிகுண்டை கண்டுபிடித்தாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

அதேபோல் முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு அனுப்பட்ட பார்சலில் இருந்த வெடிகுண்டை கைப்பற்றிய எப்பிஐ  அதிகாரிகள்,அதனை சோதனை செய்து வருகிறார்கள்.கடந்த அக்டோபர் 23-ம் தேதி ஹிலாரிக்கு அனுப்பப்பட்ட பார்சல் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் அதை கைப்பற்றிய ரகசிய சேவை அமைப்பினர் சோதனை மேற்கொண்டார்கள்.

 

இந்த தகவல்களின் அடிப்படையில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள முன்னாள் அதிபர் ஒபாமாவின்  முகவரிக்கு அனுப்பப்பட்ட  பார்சலையும் எப்பிஐ  அதிகாரிகள் சோதனை செய்தார்கள்.அப்போது தான் வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்டிபிடிக்கப்பட்டதாக எப்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #EXPLOSIVE DEVICES #CLINTON #OBAMA #HILLARY CLINTON