‘சார்..போஸ்ட் மார்டம் பண்ணாதீங்க.. இது தற்கொலைதான்’.. மகனைக் கொன்று தானும் இறந்த தந்தையின் கடிதம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 12, 2018 05:23 PM
மயிலாடுதுறையைச் சேர்ந்த இளம் வயது ஏ.சி.மெக்கானிக் சுரேஷ், சென்னை ஈசிஆர் அருகே உள்ள பனையூரில் தனது மனைவி ஜெயா மற்றும் ஒன்றரை வயது மகன் கிஷோருடன் வாழ்ந்து வந்தார். இவரது அப்பா அதே பகுதியில் வாட்ச்மேனாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் தீடீரென நள்ளிரவில் தன் பிஞ்சு மகன் கிஷோருக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, தானும் தூக்கிலிட்டுள்ளார் சுரேஷ். இதை அறிந்த அவரது மனைவி ஜெயாவும், அப்பாவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனைய மக்களின் கருத்துப்படி மிகவுல் தன்மையானவரும், நல்ல இளைஞருமான சுரேஷுக்கு அவரது அக்காவின் கணவரால் அடிக்கடி தொல்லை உண்டானதாகவும், குடித்துவிட்டு அக்கா கணவர் அடிக்கடி வந்து செய்த ரகளைகள் உள்ளிட்ட பல மன அழுத்தம் காரணமாகத்தான் சுரேஷ் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று சிலர் கூறினர். ஆனாலும், போலீசார் சுரேஷின் மனைவி மற்றும் அப்பாவை விசாரித்துவிட்டு துப்பு தேடியுள்ளனர். அப்போதுதான் சுரேஷ் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் சுரேஷ், ‘என்னை மன்னிச்சிருங்க. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னிடம் ஒரு திறமையும் போதிய வருமானமும் இல்ல.. என்னால யாருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்ல’ என்று எழுதியுள்ளார்.
மேலும் தன் குழந்தையைவிட்டு போக மனமில்லாமல், குழந்தையை கொன்றதாகவும், தன் அப்பா-அம்மாவிடம் சண்டையிடாமல், தன் மனைவியிடம் நகைகளை ஒப்படைத்துவிடுங்கள் என்றும் கூறியவர், தன் அக்கா கணவரால் தன் குடும்பம் படும் அவதியையும் குறிப்பிட்டுள்ளார். அதோடு,‘காவல்துறைக்கு: சார்.. கேஸ் போடாதீங்க.. போஸ்ட் மார்டம் பண்ணாதீங்க.. இது தற்கொலைதான், தயவுசெய்து யாரையும் சிரமப்படுத்தாதீங்க’ என்று தீர்க்கமாக எழுதி பலரையும் தன் தற்கொலையினால் உலுக்கியுள்ளார்.