’எனது இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றுவார் என நினைத்திருந்தேன்’.. துரைமுருகன்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 14, 2018 12:57 PM

திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுகவின் முதன்மைச் செயலாளரும் மூத்த அரசியல்வாதியுமான துரைமுருகனின் உணர்ச்சிமயமான பேச்சு அனைவரையும் உருகச் செய்ததோடு, அவர் தனக்கும் கருணாநிதிக்குமான விஷயங்களைப் பகிர்ந்து உரையாற்றினார்.
அதில் 50 ஆண்டுகளுக்கும் அதாவது அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஊடல், சண்டை, மன வருத்தம் என எதுவும் கருணாநிதியுடன் தனக்கு இருந்ததில்லை என்று கூறினார். மேலும் உறங்கும் நேரம் தவிர, மற்ற நேரம் அனைத்தும் கருணாநிதியுடன் இருக்கும் வாய்ப்பை பெற்றதாகவும், தான் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது தனக்கு அதற்கு உதவி செய்ததால் 2-வது முறையாக உயிர் கொடுத்தவர் கருணாநிதி என்று உணர்ச்சிப் பெருக்கமாக பேசினார்.
சுயமரியாதையை இழக்க கூடாது என கருணாநிதி அடிக்கடி கூறுவதையும், கருணாநிதி சொல்லி கொடுத்த ராஜதந்திரம் தங்களிடம் இருப்பதாகவும், அதனை தற்போதைய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிநடத்துவார் என்றும் கூறினார். திமுகவுக்கு ஆலமரம் போல இருக்கும் ஸ்டாலின் விரைவில் திமுகவின் தலைவராக போகிறார் என்றும் பேசினார்.
