Looks like you've blocked notifications!
ஸ்ரீதேவி உடலை 'மும்பைக்கு' எடுத்துவர துபாய் காவல்துறை 'அனுமதி'

நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் துபாயில் உயிரிழந்தார். நடைமுறை பரிசோதனைகள் காரணமாக, நடிகை ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டுவருவதில் தாமதம் நிலவிவந்தது.

 

இந்த நிலையில், ஸ்ரீதேவியின் உடலை இந்தியா எடுத்து வருவதற்கு துபாய் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

 

ஆவணங்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி உறவினர்களிடம் அவரது உடலை ஒப்படைக்க துபாய் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

 

அனுமதி கடிதம் ஸ்ரீதேவியின் குடும்பத்தினரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி உடலுக்கு உடனடியாக எம்பாமிங் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

BY MANJULA | FEB 27, 2018 3:09 PM #SRIDEVI #SRIDEVIDEATH #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People