WATCH VIDEO :'விளையாட்டு வினையானது'.. பாம்பை உயிருடன் முழுங்கிய போதை ஆசாமி மரணம்!
Home > News Shots > தமிழ்By Jeno | Sep 14, 2018 10:55 AM
உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த நபர் விளையாட்டாக உயிருள்ள பாம்பை விழுங்கி உயிரிழந்துள்ளார்.
'விளையாட்டு வினையாகும்' என்ற பழமொழி உண்டு.அதை உண்மையாக்கும் விதமாக உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த சம்பவம் அமைந்துள்ளது.அம்மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகிபால் சிங்.கூலித் தொழிலாளியான இவர் அதிகமாக மது குடிக்கும் பழக்கம் உடையவர்.இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் சிறிய பாம்பு ஒன்று சென்று கொண்டிருந்தது.இதைக் கவனித்த மகிபால் விளையாட்டாக அந்த பாம்பை கையில் எடுத்து விளையாடினார்.
இதைக் கவனித்த அவரது நண்பர்கள் பாம்பிடம் விளையாடுமாறு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.மிதமிஞ்சிய போதையில் இருந்ததால் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் அவரும் செய்து கொண்டே இருந்தார்.இதை நன்றாக பயன்படுத்திக்கொண்ட மகிபாலின் நண்பர்கள் அதை செய் இதை செய் என தொடர்ந்து தூண்டிக்கொண்டே இருந்தனர்.அவர் செய்வதை எல்லாம் ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டே இருந்தார்.
இறுதியாக ஒருவர் பாம்பை வாயில் போடு எனக்கூற சற்றும் எதையும் யோசிக்காமல் மகிபால் பாம்பை வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.இதனால் உடனடியாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.உடனே பாம்பை வெளியில் எடுப்பதற்காக வாந்தி எடுக்க முயற்சி மேற்கொண்டார்.ஆனால் அந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.ஏனென்றால் பாம்பானது வயிற்றுக்குள் சென்றுவிட்டது.உடனே திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.குடித்து விட்டு விளையாட்டாக செய்த காரியத்தால் அவரது உயிர் போய்விட்டது.