'OTP யாரும் கேட்டா சொல்லாதீங்க பாஸ்'.. அப்புறம் உங்களுக்கும் இதே கதிதான்!
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 10, 2018 05:57 PM
OTP எனப்படும் one time password -ஐ யார் கேட்டாலும் சொல்லக் கூடாது என்பதற்கு உதாரணமாக மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர் கடந்த வாரம் தனது அக்கவுண்டில் இருந்து 1150 ரூபாயை மொபைல் ஆப் வழியாக,தனது நண்பனின் அக்கவுண்டிற்கு அனுப்பியுள்ளார். அப்போது தவறுதலாக அவர் மற்றொரு எண்ணிற்கு பணத்தை அனுப்பி விட்டார்.
இதைத் தொடர்ந்து வங்கியைத் தொடர்புகொண்டு இதுகுறித்த விவரங்களை அவர் தெரிவித்துள்ளார். அப்போது எதிர்முனையில் பேசியவர் கிருஷ்ணாவின் வங்கிக்கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். தொடர்ந்து அவரது மொபைலுக்கு வரும் OTP எண்ணை தனக்குப் பகிரும்படி கேட்டிருக்கிறார்.
முதலில் தயங்கிய கிருஷ்ணா பின்னர் 1150 ரூபாய் திரும்பக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் OTP விவரங்களை தெரிவித்து உள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ 35000 எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணா அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்க, அவர்கள் OTP எண்னை யாருக்கும் சொல்லக்கூடாது என அறிவுரை அளித்து அனுப்பி வைத்துள்ளனர்.