தயாநிதி மாறன் போன்றோர்கள் நிதி கொடுங்கள்.. கலகலப்பூட்டிய பொருளாளர் துரைமுருகன்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 28, 2018 01:44 PM

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற இன்றைய திமுக பொதுக்குழு விழாவில், கட்சியின் பொருளாளர் பதவியேற்ற துரைமுருகன் சில வார்த்தைகள் பேசினார்.
அதில், உலக தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் கலைஞர் என்றும் சிவப்பு கம்பளத்தில் நடந்து கருணாநிதி பதவியில் அமரவில்லை - சிலுவைகளை சுமந்தே பதவிகளை அடைந்தார் என்றும் பேசினர்.
மேலும் பேசியவர், ‘பொருளாளர் வேலை நிதி சேகரிப்பது தான், தயாநிதி மாறன் போன்றவர்கள் நிதி கொடுங்கள்...நிதி கொடுக்க இயாலதவர்கள் ஆதரவு கொடுங்கள்’ என்று பேசி அரங்கில் கலகலப்பூட்டினார்!
Tags : #DMK #MKSTALIN #MKARUNANIDHI #DAYANITHIMARAN #DURAIMURUGAN
