'கலைஞர் வீட்டிற்கு வந்தவுடன் நேரில் வந்து பாருங்க'.. சிறுமியை நெகிழவைத்த ஸ்டாலின்!
Home > News Shots > தமிழ்By Jeno | Aug 03, 2018 10:20 AM
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் பெறவேண்டி பல்வேறு தரப்பினரும் மனமுருகி பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேபோல சென்னை பட்டாபிராமை சேர்ந்த மிச்செல் மிராக்ளின், என்ற 8 வயது சிறுமி கலைஞர் அவர்கள் உடல்நலம் பெற வேண்டும் என கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதம், தி.மு.க ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. சிறுமியின் இந்த நெகிழ்ச்சியான கடிதம், செய்தித்தாள்களிலும் இடம்பிடித்தது. இந்நிலையில், சிறுமி மிச்செல் மிராக்ளின் மற்றும் அவரது தாயாரை ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் அச்சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமி மற்றும் அவரது தாயாரோடு உரையாடினார்.. மேலும் கலைஞர் அவர்கள் வீடு திரும்பியுடன் வீட்டிற்கு வந்து அவரை சந்திக்குமாறு சிறுமியிடம் தெரிவித்தார்.
தலைவர் கலைஞர் @kalaignar89 உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தை மிச்சல் மிராக்ளின் மற்றும் அவரது தாயாரை சந்தித்து, அன்போடு உரையாடி மகிழ்ந்தார் கழக செயல் தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள். @mkstalin #GentlemanMKS pic.twitter.com/77HsDAW1kc
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) August 2, 2018