'தீபாவளி சிறப்பு பேருந்துகள்'..முன்பதிவு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் உள்ளே!
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 11, 2018 06:46 PM
தீபாவளி பண்டிகை வருகின்ற 6-ம் தேதி வருகிறது. இதனையொட்டி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களை இன்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,''நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும்.தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும்.மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
பண்டிகை முடிந்து சென்னைக்கும், பிற ஊர்களுக்கும் 11,842 பேருந்துகள் இயக்கப்படும்.இதற்கான முன்பதிவுகள் நவம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறும்.கோயம்பேடு பணிமனையில் 26 கவுண்டர்களும், தாம்பரம் மெப்ஸ் பணிமனையில் 2 கவுண்டர்களும், பூந்தமல்லி மற்றும் மாதவரம் பணிமனைகளில் தலா 1 கவுண்டர்கள் என மொத்தம் 30 கவுண்டர்களில் இதற்கான முன்பதிவினை செய்து கொள்ளலாம்.
கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈ.சி.ஆர் வழியாக செல்லும் கடலூர், பாண்டிச்சேரி மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம்,விக்கிரவாண்டி மற்றும் பண்ருட்டி வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம்,செய்யூர்,ஆரணி,வேலூர், ஆற்காடு,திருப்பத்தூர் மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கண்ட ஊர்கள் இல்லாமல் பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.