'ரத்தம் சொட்டச்சொட்ட நடித்தாரா சூப்பர்ஸ்டார்?.. ரகசியத்தை உடைத்த இயக்குநர்!
Home > News Shots > தமிழ்By Manjula | Nov 23, 2018 02:50 PM
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் 2.O திரைப்படம் வருகின்ற 29-ம் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 10,000 அரங்குகளில் இப்படம் வெளியாகி புதிய சாதனை படைக்கவுள்ளது.மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தினை உலகம் முழுவதுமே, ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
இந்தநிலையில் இந்தியாவின் 'பிரமாண்ட இயக்குநர்' ஷங்கர் நமது தளத்திற்கு அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டியில் 2.O படம் குறித்த பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து நமது தளத்திற்கு அவர் அளித்த விரிவான பேட்டியினை இங்கே காணலாம்.
2.O ஷூட்டிங் அப்போ ரஜினி சாருக்கு அடிபட்டு ஹாஸ்பிடல் போக மாட்டேன்னு சொன்னாராமே? நீங்க எப்படி கன்வின்ஸ் பண்ணீங்க?
இங்க ஓஎம்ஆர்ல ஷூட்டிங். எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்கனு ரொம்ப வேகமா வந்து இருக்காரு. வரும்போது படி ஸ்லிப்பாகி இருக்கு.அப்போ கீழே விழுந்து கால் முட்டில பெரிய அடி. ஓபனாகி பிளட் ஊத்துது. அது எனக்குத் தெரியாது. வந்து என்ன ஷாட்? என்ன ஷாட்னு?கேட்டாரு. நானும் சொல்லிட்டேன். அது ரெடி பண்ணி எடுக்கலாம்னு. அவர் போய் ஷூட்டுக்கு ரெடி ஆகிட்டு இருக்காரு டச்சப் எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. எல்லாரும் அவரை சுத்தி நின்னு பேசிட்டு இருக்காங்க.
அப்போ மேனேஜர் வந்தாரு. சார் அவருக்கு அடிபட்டு இருக்கு. சாருக்கு அடிபட்டு இருக்குனு சொன்னாரு. நான் போய் பார்த்தா இல்ல ஒண்ணும் இல்லனு சொன்னாரு. இல்ல காமிங்கன்னு சொல்லி எடுத்து பார்த்தா பெரிய காயமா இருக்கு. நாங்க எல்லாரும் மொதல்ல ஹாஸ்பிடல் போங்கன்னு சொல்றோம். இல்ல ஷாட் ரெடி ஆயிடுச்சு முடிச்சிட்டு போறேன்னு சொல்லறாரு.
இல்ல நீங்க பர்ஸ்ட் ஹாஸ்பிடல் போங்கன்னு சொல்றோம். லைட்டிங் எல்லாம் ரெடி ஆகிடுச்சு. ஒரு ஷாட் முடிச்சிட்டு போறேன்னு சொல்றாரு. அதுக்கு அப்புறம் எல்லோரும் சுத்தி நின்னு கும்பலா சொல்லி அதுக்கப்புறம் மனசே இல்லாம தான் ஹாஸ்பிடல் போனாரு. ஆனா டிரீட்மெண்ட் பண்ணதுக்கு அப்புறம் அந்த காயம் சரியாக ஒரு மாசம் அவ்ளோ பெரிய காயம் அது. அத வச்சுட்டு இல்ல நான் நடிக்கிறேன், நடிக்கிறேன்னு சொல்றாரு.
நாம இத்தனை வருஷம் ஒரு ப்ராஜெக்ட்ல இருக்கோமேனு பீல் பண்ணி இருக்கீங்களா?
என்னோட டைம் வேஸ்ட் ஆகல. 2.O படத்தோட சேர்த்து இன்னும் 2 கதை எழுதி இருக்கேன். ஷூட்டிங் போகலையே தவிர எனக்கு டைம் கெடைக்கறப்ப நான் அடுத்தடுத்த ஸ்க்ரிப்ட் எழுதிட்டு தான் இருக்கேன். அதனால என்னோட டைம் வேஸ்ட் ஆன மாதிரி தெரியல.
2.O படத்தின் மொத்த பட்ஜெட் செலவு எவ்வளவு?
அது கரெக்ட்டா தயாரிப்பாளருக்கு தான் தெரியும். நான் படத்தோட மொத்தக் கதையும் அவங்க கிட்ட சொல்லிட்டேன். அவங்களுக்குத் தெரியும். எது எதுக்கு எவ்வளவு ஆகும்னு. அதையும் மீறி எதிர்பாராம கொஞ்சம் செலவுகள் எல்லாம் ஆகிடுச்சு இந்த விஎப்எக்ஸ் சைட்ல. எனக்குத் தெரிஞ்சு படத்துக்கு செலவானது 400-450 கோடி இருக்கும். அதையும் தாண்டி தயாரிப்பாளர் சைடுல பப்ளிசிட்டி செலவுகள், புரொடக்ஷன் செலவுகள் எல்லாம் இருக்கும். அது என்ன? எவ்வளவுன்னு அவங்களுக்குத் தெரியும்.
2.O விழாவுல அக்ஷய் தமிழ்ல பேசினார். இந்த படத்துல தமிழ் டயலாக் அவர் பேசியிருக்காரா?
அவர் தமிழ்ல பேசுறேன்னு தான் சொன்னாரு.சில இடங்கள்ல தமிழ்லையும் எழுதி இருக்கோம். சில இடங்கள்ல தமிழ், சில இடங்கள்ல உங்க லாங்வேஜ்ல பெர்பார்ம் பண்ணுங்கன்னு மிக்ஸ் பண்ணி தான் எடுத்து இருக்கோம்.
ரஹ்மான் சாருக்கு ஒரு டியூன் கொடுக்கும்போது எப்படி ஜட்ஜ் பண்ணுவீங்க?
சில பாட்டு போடும்போதே புடிச்சிரும். அதிரடியா இருக்கும். சில நேரம் கேட்கக்கேட்க டியூன் கொடுத்துருவாரு. நம்ம கார்ல போகும்போதோ இல்லை வேற ஏதோ பண்ணும்போதோ அந்த டியூன் ஹம்மிங் வந்துருச்சுனா அது ஓகேன்னு அர்த்தம். சில நேரம் டியூன் நல்லா இருந்தாலும் வேற டியூன் இருந்தா நல்லா இருக்கும்னு தோணும். அவர் அத புரிஞ்சிகிட்டு இதுதான நீங்க எதிர்பார்க்கிறீங்க நான் ஒர்க் பண்ணி தரேன்னு சொல்லுவாரு.
இயக்குநர் ஷங்கரின் விரிவான பேட்டியினை காண லிங்கை கிளிக் செய்யவும்...