‘இனி இந்த வேலைய மட்டும் செஞ்சா போதும்னு சொல்லிட்டாங்க’.. மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 16, 2019 07:47 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி சதமும், தோனி அரை சதமும் எடுத்து அணியின் இலக்கு ரன்களான 299-ஐ எடுக்க பெரிதும் உதவி புரிந்தவர்கள் என்றாலும் இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் பங்கும் இன்றியமையாததாகவே அமைந்தது.
இந்த நிலையில், வருங்காலத்தில் தன்னுடைய அணியில் தனது பணி என்னவாக இருக்கும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ள தகவல் பெருமளவில் வைரலாகி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நீண்டதொரு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 2-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டியில், ஆறாவது அணியில் களமிறங்கிய தினேஷ் கார்த்தில் 14 பந்துகளுக்கு 25 ரன்கள் விளாசியதே, தோனியின் அரை சதத்துக்கு வழிவகுத்தது. இதனாலேயே 5-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்து, தோனியுடன், தினேஷ் கார்த்திக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
முன்னதாக தோனி விக்கெட் கீப்பராகவே இந்திய அணிக்கு மீண்டும் விளையாட வந்தால், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோருக்கு இடம் இருக்காது என்று சலசலப்பு எழுந்தது. எனினும் தன்னை 6வதாக களமிறக்கி, பிசிசிஐ அளித்த வாய்ப்பினை பிசகாமல் பயன்படுத்தியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
இதனையடுத்து, எதிர்ப்படும் காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கு இருக்கப்போகும் பணிகள் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் ஒருநாள் போட்டிகளில் மேட்சை ஃபினிஷ் செய்வதற்கு தயாராக தன்னை இருக்கும்படியும், அதுவே தனது பணியாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெளிவாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு தன்னுடைய அனுபவங்கள் உதவியதாகவும், இவ்வாறு ஆட்டத்தை முடிப்பது கடினமான பணி - அதற்கு கூலாக இருக்க வேண்டும்- அவ்வாறு கூலாக இருந்து கொடுத்த பணியை சிறப்பாக முடித்தால் அதுதான் எல்லையற்ற மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.