
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் நேற்று பக்தர் ஒருவர் தண்ணீர் லாரி மோதி இறந்ததாக, 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆம்புலன்ஸ் வண்டி கிடைக்காததால், உடலை குப்பை வண்டியில் எடுத்து செல்ல அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான ரமாமணி (54) ஒடிசாவை சேர்ந்தவர் என்றும், கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BY SATHEESH | FEB 16, 2018 3:28 PM #LORRY #TN #TAMILNADU #DEVOTEE #GARBAGE #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories