இந்திய வரலாற்றில் புதிய மைல்கல்... பெண்கள் ஸ்வாட் குழு !

Home > News Shots > தமிழ்

By |
Delhi police gets indians first all women swat team force

இந்திய வரலாற்றில் முதல் முறையாகச் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகள் படைப்பிரிவில் 36 பெண் காவலர்கள் இணைக்கப்பட உள்ளனர்.

 

தற்போது பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் தங்களது திறனை பல்வேறு துறைகளில்  நிருபித்து வருகிறார்கள்.இதற்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல் இந்தியாவிலே முதல்முறையாக டெல்லி காவல்துறையில் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகள் படைப்பிரிவில் (SWAT ) பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

 

இது முழுக்க முழுக்க பெண்களை கொண்டு செயல்படும் இந்த பிரிவில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 13 பேர், அருணாச்சலபிரதேசம், சிக்கிம், மணிப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தலா ஐந்து பெண்கள்,மேகாலயா 4, நாகாலாந்து 2, மிசோரம் 1 பெண் என மொத்தம் 36 பெண் கமாண்டோகள்உள்ளனர்.

 

இவர்கள் முதல் முறையாக வருகிற சுதந்திர தினத்தன்று டெல்லில் மற்ற பாதுகாப்பு படையினருடன் சேர்த்து பாதுகாப்பு அளிக்க இருக்கிறார்கள்.

 

முன்னதாக இந்த 36 பெண்களும் தேசிய பாதுகாப்பு படை பிரிவில் சேர்ந்து 15 மாதங்கள் பயிற்சி பெற்ற பின்னரே இந்தப் படையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

 

அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் !

Tags : #INDIANMILITARY #DELHI POLICE #SWAT