Biggest Icon of Tamil Cinema All Banner

'தண்ணீர் நிறம் மாறும்;நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்'.. திடுக்கிட வைக்கும் உண்மைகள்!

Home > News Shots > தமிழ்

By |
Delhi Death Case: 11 Diaries has seized by Police

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  ஒரு வீட்டிலிருந்து கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகத் தொங்கிய 11 பேர் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றிய டைரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்?உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்திருந்தனர்.

 

மேலும் வீட்டின் சுவர்களில் சில விசித்திரமான தடயங்களும் போலீசாருக்குக் கிடைத்துள்ளன. வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்துள்ளன. ஆனால் அந்த குழாய்கள் உள்ளே எதனுடனும் இணைக்கப்படவில்லை. இதனால் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.


அவர்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவை நேற்று  சோதித்துப் பார்த்த போலீசார் அதில் அவர்கள் வீட்டிற்கு இரவில் யாரும் வரவில்லை என்றும், அவர்கள் தற்கொலைக்கு தயாராகிய காட்சிகள் அதில் பதிவாகி இருந்ததாகவும் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் போலீசார் அவர்கள் வீட்டை இன்று மேலும் சோதனை செய்ததில் வீட்டில் இருந்து மொத்தம் 11 டைரிகள், போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த டைரிகள் அனைத்தையும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே தொடர்ந்து 11 ஆண்டுகளாக எழுதி வந்துள்ளார்.

 

அந்த டைரியில், 'ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வையுங்கள்.அந்தத் தண்ணீரின் நிறம் எப்போது மாறுகிறதோ, அப்போது நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என எழுதப்பட்டுள்ளது. மேலும், இந்த சடங்குகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் அவிழ்க்க வேண்டும்' என எழுதப்பட்டிருக்கிறது.

 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''டைரியில் எழுதிய வரிகளுக்கும் மரணத்துக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்,''என தெரிவித்துள்ளனர்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Delhi Death Case: 11 Diaries has seized by Police | தமிழ் News.