96 India All Banner
Ratsasan All Banner

28 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் சந்தித்து உருகிய காதல் தம்பதியர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 08, 2018 11:42 AM
Couple meet after 28 years of serving sentence in prison

28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான ஆயுள் தண்டனை கைதி, முதியோர் இல்லத்தில் இருந்த தனது மனைவியை பார்த்த சம்பவம் பலரையும் உருக்கியுள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட, அதில் திருப்பூர் நாச்சிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது 65) வேலூர் ஜெயிலில் இருந்து 28 ஆண்டுகள் கழித்து விடுதலை ஆனார்.  இலங்கையை 60 வயதான விஜயா, இலங்கைத் தமிழர் பிரச்சினையின்போது தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து தமிழகத்துக்கு அகதியாய் வந்த இவர் தெருக்களில் நடனம் ஆடி  வந்த வருமானத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தியவர்.

 

விஜயாவின் கலைக்கூத்தினால் ஈர்க்கப்பட்டு அவரை காதலித்தார் சுப்பிரமணியம். வீட்டார் காதலை ஏற்க மறுக்க, வீட்டைத் தாண்டி வந்த விஜயா 1985-ல் சுப்பிரமணியத்துடன் இணைந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு நடனமாடி வருமானம் ஈட்டியபடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவர்களுக்கு ஒரு பெருத்த அடி விழுந்தது. ஆடிய களைப்பில் சாலை ஓரம் ஒரு நாள் இரவு உறங்கியபோது உண்டான ஒரு பிரச்சினையில் ஒருவர் கொலை நடக்க, சூலூர் போலீசார் இந்த கலைக்கூத்தாடும் கணவன்-மனைவி இருவரையும் 1990-ம் ஆண்டு கைது செய்ய, பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

 

25 ஆண்டுகளை சிறையில் இருந்த விஜயாவு உடல் நலக்குறைவால் மனநோயாளியாக மாறினார். பேச முடியாமல் போனார். பின்னர் 2013ல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை ஆனவர் போக வழியின்றி, வேலூர், அரியூர் முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்து பின்னர், தனது காதல் கணவருக்காக ஆண்டு பல காத்திருந்தார். இந்த நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி வேலூர் மத்திய சிறையில் இருந்த சுப்பிரமணியத்தை 28 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்ததும், அவர் தனக்காக காத்திருந்த மனைவியை காண முதியோர் இல்லம் சென்றார் சுப்பிரமணியம். அவரைப் பார்த்ததும் ஓடிச்சென்று கைகளைப் பிடித்து அழுது கண்ணீர் வடித்தார் விஜயா.

 

தற்காப்புக்காக செய்த செயலால் இத்தனை காலம் வாழ்க்கையை வாழமுடியாமல், தண்டணையை அனுபவித்தோம். இனியும் எங்கள் சொந்த பந்தங்கள் ஏற்கப்போவதில்லை எங்களை. ஆகையால் கிடைக்கும் வேலையை வைத்து வாழவிருக்கிறோம். எனினும் என்னை விட்டால் யாரும் இல்லாத, என்னை மட்டுமே நம்பி இருக்கும் விஜயாவை உயிராய் எண்ணி காப்பேன் என்று நெகிழ்ந்து கூறுகிறார்.

Tags : #LOVE #TAMILNADU #COUPLES #OLDLOVE #OLDCOUPLES