நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும், தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், “நடிகை ஸ்ரீதேவியின் மறைவு செய்தி கேட்டு காங்கிரஸ் கட்சி மிகுந்த வேதனை அடைகிறது.
மிகச்சிறந்த நடிகை, திறமையானவர்.அவரின் படைப்புகளும், நடிப்பும் காலத்துக்கும் ரசிகர்கள் மனதில் நீங்காதிருக்கும். ஸ்ரீதேவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
கடந்த 2013-ம்ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடிகை ஸ்ரீதேவிக்கு 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அளித்து கவுரவித்தது,” எனத் தெரிவித்து இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் இந்த பதிவைக் கண்ட ரசிகர்கள் ஸ்ரீதேவியின் மரணத்திலும் அரசியல் செய்வதா? எனக்கேட்டு, அக்கட்சியை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து விட்டனர். இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த டுவீட்டை நீக்கியுள்ளது.
BY MANJULA | FEB 25, 2018 3:55 PM #SRIDEVI #SRIDEVIDEATH #CONGRESS #TWITTER #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #டுவிட்டர் #காங்கிரஸ் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS