காங்கிரஸ் எம்.எல்.ஏ-வைத் 'திருமணம்' செய்கிறாரா ராகுல்காந்தி?
Home > News Shots > தமிழ்By Manjula | May 08, 2018 01:41 PM
உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட சதார் சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக அதிதி சிங் (வயது 29) பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அதிதி சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திருமணம் செய்து கொள்ளப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.
அதிதி-ராகுல் திருமணம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், சோனியா காந்தியின் ஒப்புதலுக்காக இருவரும் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிதி இதனை உறுதியாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘இந்த தகவலை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி வதந்தி பரப்பப்படுகிறது. ராகுல்காந்தி எனது சகோதரர் போன்றவர். அவருக்கு நான் ராக்கி கயிறு கட்டியுள்ளேன்,'' என விளக்கமளித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Congress MLA Aditi Singh denies wedding rumours | தமிழ் News.