‘ஸ்டெர்லைட் ஆலையை மூடியது ஏற்றுக்கொள்ள முடியாதது’.. டெல்லி பசுமை தீர்ப்பாயம் அதிரடி!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 28, 2018 02:46 PM
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடியில் அரசுக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போராட்டம் கலவரமாக மாறிய பின், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து இன்னும் பலர் மீளவில்லை. அந்த சம்பவத்துக்கு பிறகு தமிழக அரசால் அந்த தாமிர உருக்காலை (ஸ்டெர்லைட்) மூடப்பட்டது.
எனினும் அதன் பின், ஸ்டெர்லைட் ஆலை நிறுவனமான வேதாந்தா, தனது நிறுவனத்தை தொடர்வதற்கான பரீசலனை மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்திருந்தது. அதனை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக காரணங்களுக்காக ஆலை செயல்படுவதை அனுமதித்ததோடு, நிறுவனத்தை ஆய்வு செய்ய மேகாலயாவின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் மற்றும் வனத்துறை-சூழலியல்-மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தை சேர்ந்த வரலட்சுமி உள்ளிட்டோரின் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த ஆலையை ஆய்வு செய்த இந்த குழு, கடந்த 26-ம் தேதி தங்களின் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் ஆலையை மூடுவதற்காக தொடுக்கப்பட்ட வழக்கினை இன்று விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் , மேற்கண்ட டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையை ஆதாரமாக வைத்துக்கொண்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என்று அதிரடியாகக் கூறியுள்ளது.