
பிக்பாஸ் புகழ் ஜூலி சமீபத்தில் வெளியான விமலின் 'மன்னர் வகையறா' படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
மேலும், கே7 புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஜூலி நாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில், 'தளபதி 62' படத்தில் ஜூலி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, "விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'தளபதி 62' படத்தில் ஜூலி நடிக்கவில்லை. வழக்கம்போல இதுவும் மற்றுமொரு வதந்தியே" எனத் தெரிவித்தனர்.
BY MANJULA | FEB 13, 2018 4:25 PM #THALAPATHY62 #VIJAY #JULIE #விஜய் #ஜூலி #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories