பாஸின் அனுமதி இல்லாமல் கர்ப்பமானால், கருக்கலைக்க சொல்லும் நிறுவனம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 22, 2018 07:24 AM
சீனாவின் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண்கள் தாங்கள் கர்ப்பமானால். உயர் அதிகாரியின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று கடுமையான சட்டதிட்டங்களைப் போடப்பட்டுள்ளது.
பலரையும் அதிருப்திக்கும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுமுள்ள இந்த அறிவிப்பினால் கம்பெனி மீது பல ஊழியர்கள் கடும் கோபத்திலும் உள்ளனர். சீனாவின் ஷிஜாஹுயாங் அருகே இயங்கி வரும் இந்த தனியார் நிறுவனத்தில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கான பாலிசியானது, அங்கு பணிபுரியும் பெண்ணின் பாலியல் சுதந்திரத்தில் தலையிடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக பலரும் கருதுகின்றனர்.
மிக முக்கியமாக பாஸ் அல்லது நிறுவன மேலதிகாரத்துவத்தில் இருப்பவரின் அனுமதி இன்றி ஒரு பெண் திருமணத்துக்கு முன்னரோ, பின்னரோ கர்ப்பம் தரிப்பதை கண்டிக்கிறது. கட்டுப்படுத்துகிறது. இந்த நெருக்கடியான கட்டுப்பாட்டுக்கள் இயங்கும் பெண்களுக்கு ஆதரவாகவும் இந்நிறுவனத்தின் நிர்வாகத்துக்கும் எதிராக குரல்கள் சமூக வலைதளத்தில் மேலோங்கி வருகின்றன.