தேனிலவு மற்றும் திருமணத்துக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ஆண்டுக்கு 15 மில்லியன் டாலர்களை, சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள சாங்க்ஷி மாகாணம் ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் " சீனாவில் ஆண்களின் திருமண வயது 25 ஆகவும், பெண்களின் திருமண வயது 23 ஆகவும் உள்ளது. ஆனால் 60% இளைஞர்கள் இந்த வயதைத் தாண்டியே திருமணம் செய்து கொள்கின்றனர்.
இதனால், குறைந்து வரும் திருமணங்களை அதிகரிப்பதற்காக சாங்க்ஷி மாகாண அரசு இத்திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர, திருமணத்துக்குத் தேவையான வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கிட செயலி (ஆப்) ஒன்றையும், சாங்க்ஷி அரசு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.