'உலககோப்பைக்கு இந்த உத்தியதான்...ஃபாலோ பண்ண போறோம்'...பிசிசிஐக்கு கைகொடுக்குமா?
Home > News Shots > தமிழ்By Jeno | Feb 16, 2019 01:27 PM
உலகக்கோப்பை போட்டிகள் நெருங்குவதால்,வீரர்களின் வேலை பளுவினை சமாளிக்க புதிய உத்தியை பின்பற்ற இருப்பதாக,இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'உலகக் கோப்பைக்காக 18 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.அந்த வீரர்களின் வேலைப்பளுவை சமாளிப்பதற்கு,பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது .ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள்.உலகக்கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் உலககோப்பைக்கு முன்பு வரை சோதித்து பார்க்கப்படுவார்கள்.
உலககோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு,ஓய்வு அளிப்பதற்கு அந்தந்த அணிகள் ஒத்துக்கொள்ளுமா என்பதை பொறுத்து மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும்.வீரர்களின் வேலைப்பளு மற்றும் வீரர்களின் தேர்வு குறித்து இன்னும் சில முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.அதன் பின்பு உலகக்கோப்பைக்கான உத்தேச அணியின் அறிவிப்பு வெளியாகும்.
மேலும் ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை ஒவ்வொரு அணிக்கும் வித்தியாசமான அணுகுமுறைகள் இருக்கின்றன.எனவே உலகக் கோப்பையை மனதில் கொண்டு அணிகள் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.