பழனி முருகன் கோவிலில் ஐம்பொன் சிலை செய்ததில், தங்கத்தை மட்டும் சேர்க்காமல் சுமார் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஸ்தபதி முத்தையாவை, போலீசார் கைது செய்துள்ளனர்.
முத்தையாவுக்கு சொந்தமான ஸ்வர்ணம் என்ற சிற்ப கலைக்கூடத்தின் மூலமாக செய்யப்பட்ட உற்சவர் சிலை 6 மாதங்களுக்குள் கருத்துப்போனதால், கோவிலின் பூட்டிய இருட்டறையில் கடந்த 14 ஆண்டுகளாக இருந்துள்ளது.
இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிலையை கைப்பற்றி தொழில்நுட்பக்குழுவினர் பரிசோதித்ததில், 22 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சிலையில் மிகக்குறைந்த அளவே தங்கம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, முத்தையா மற்றும் கோயிலின் முன்னாள் செயல் அலுவலர் கே.கே.ராஜா, மீது சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.
OTHER NEWS SHOTS