ஓட்டு போடுறதுக்கு முன்னாடி வாக்கு இயந்திரத்திற்கு அமைச்சர் செய்த வேலை!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 22, 2018 06:54 PM
சட்டீஸ்கரில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலின்போது, வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் இயந்திரத்துக்கு பூஜை செய்யும் அமைச்சரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சட்டீஸ்கர் மாநில அமைச்சர் தயால்தாஸ் பாகல் என்பவர், பாஜக வேட்பாளராக நவகர் தொகுதியில் போட்டியிட்டபோது அம்மாநிலத்துக்குட்பட்ட பேமேத்தரா மாவட்டத்தில் இருக்கும் நவகர் தொகுதியின் வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னர், தயால்தாஸ் வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு பூஜை போட்டிருப்பதாக வெளிவந்த வீடியோ செய்திகளை அடுத்து விஷயம் பரபரப்பானது.
இந்நிலையில் இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியராகவும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமாக பொறுப்பு வகிக்கும் அதிகாரி மகாதேவ் காவ்ரே,வீடியோ மற்றும் பூஜை பற்றிய விளக்கம் கேட்டு அமைச்சருக்கு கடிதம் அனுப்பியதாகவும், அந்த வீடியோவில் வாக்குச் சாவடியின் எண் புலப்படவில்லை என்றும் கூறியவர், இதுபோன்ற சம்பவங்கள் ஏற்புடையதல்ல என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்த செயலுக்கு தன் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள காங்கிரஸ், 15 ஆண்டுகளாக மக்கள் பணியை செய்யாமல், வாக்கு இயந்திரத்துக்கு பூஜை செய்வதால் மட்டும் ஓட்டை பெற்றுவிட முடியாது என விமர்சித்துள்ளது.