'இனி சாப்பிட நேரம் இல்லனு சொல்ல முடியாது'...அதுக்கும் வழி வந்தாச்சு பாஸ்!
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 24, 2018 03:58 PM
மனிதருக்கு உணவூட்டும் ரோபோவை,ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
கடந்த 1936ஆம் ஆண்டு மார்டன் டைம்ஸ் என்ற சார்லி சாப்ளின் படம் வெளிவந்தது. இதில் நேரத்தை மிச்சப்படுத்த தானாக உணவு ஊட்டும் இயந்திரம் ஒன்று இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.அதேபோல் படத்தில் வந்த கற்பனையை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிஜமாக்கியுள்ளனர்.உடலோடு அணைந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளஇந்த ரோபோவானது மனிதர்களுக்கு தானாக உணவு ஊட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை வடிவமைத்துள்ளனர்.
உணவை ஊட்டும் நேரத்தை மட்டும் குறிப்பிட்டுவிட்டால் போதும்.மற்றவைகளை அந்த ரோபோவே பார்த்துக்கொள்ளும்.இந்த ரோபோவினால் வேலை பார்த்துக்கொண்டே சாப்பிடலாம்.அதுமட்டுமல்லாமல் சாப்பிட நேரமில்லை,என்று இனி யாரும் சொல்ல முடியாது என இதனை வடிவமைத்த பல்கலைகழக விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர்.
சார்லி சாப்ளின் படத்தில் வந்த கற்பனையை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்தற்போது நிஜமாக்கியுள்ளனர்.ரோபோ உணவை ஊட்டிவிடும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.