சென்னை பவுலர்களின் அதிரடியில் 'சிதறிப்போன' பஞ்சாப் கிங்ஸ்...தோனி அணிக்கு இலக்கு இதுதான்!
Home > News Shots > தமிழ்By Manjula | May 20, 2018 10:03 PM
புகைப்பட உதவி @IPL
புனே மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களை எடுத்தது.
பஞ்சாப் அணியின் 'டாப் பேட்ஸ்மேன்களான' கே.எல்.ராகுல்(7), கிறிஸ் கெயில்(0), ஆரோன் பிஞ்ச் (4) ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் முதல் 4 ஓவர்களுக்குள் பஞ்சாப் அணி இழந்தது.
இதைத்தொடர்ந்து மனோஜ் திவாரி, டேவிட் மில்லர் இருவரும் இணைந்து பஞ்சாப் அணியின் ரன் விகிதத்தை உயர்த்தும் வகையில் சீராக ஆடினர். ஆனால் திவாரி 35 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழக்க, தொடர்ந்து மில்லரும் 24 ரன்களில் பிராவோ பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அந்த அணியின் கருண் நாயர் தொடர்ந்து அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். கருண் நாயர் 54 ரன்களில் இருந்தபோது பிராவோ பந்தில் தந்து விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார்.
கருணைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 19.4 ஓவர்கள் முடிவில், அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்தது.
சென்னை அணியில் அதிகபட்சமாக லுங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், சென்னை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.