இந்த '3 வயசு பையனுக்கு' முதல்வரை விட '6 மடங்கு' சொத்து அதிகம்.. யாரு தெரியுமா?
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 22, 2018 12:34 PM
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் கடந்த 8 வருடங்களாக, தனது சொத்துகள் குறித்த விபரங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.அந்த வகையில் அவரை விட அவரின் பேரின் சொத்து மதிப்பு அதிகம் என்னும் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில்,'இந்திய முதல்வர்களிலேயே சந்திரபாபு நாயுடுதான் அதிக சொத்து வைத்திருப்பவர் என்று அந்த ஆய்வில் தெரிய வந்தது.அவரின் மொத்த சொத்து மதிப்பு 177 கோடி ரூபாயாகும்' என்று தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தாமாகவே முன் வந்து தனது சொத்து விவரங்களை வெளியிட்டார்.அதனை வைத்துப் பார்க்கும்போது, அவர் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 81.83 கோடி ரூபாய் ஆகும். இது சென்ற ஆண்டு 69.28 கோடி ரூபாய் என்ற நிலையில் இருந்தது. இதன் மூலம் அவர்களின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 12.55 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 2.53 கோடி ரூபாயிலிருந்து கிட்டத்தட்ட 3 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதேபோல அவரது மனைவியின் சொத்து மதிப்பு 25 கோடி ரூபாயிலிருந்து 31 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் மகனான நரலோகேஷின் சொத்து மதிப்பு, 15.21 கோடி ரூபாயிலிருந்து, 21.40 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல சந்திரபாபு நாயுடுவின் பேரனான தேவான்ஷின் பெயரில் இருந்த 11.54 கோடி ரூபாய் சொத்துகளின் மதிப்பு 18.71 கோடி ரூபாயாக மாறியுள்ளது.இதில் சுவாரசியம் என்னவென்றால் சந்திரபாபு நாயுடுவை விட அவர் பேரின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகமாகும்.