#METOO-வில் சிக்கும் குற்றவாளிகளை தண்டிக்க தனிக்குழு: மத்திய அரசு!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 12, 2018 08:23 PM
சமீபத்தில் #Me Too என்கிற ஹேஷ்டேகின் கீழ் நிறைய பெண்களும், குறைந்த ஆண்களும் தங்கள் பாலியல் தீண்டலுக்கு எதிரான குரல்களை அனுபவத்தோடு பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் என்பதால் பிரபலங்களாக இருந்தாலும் கூட ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை யாராக இருந்தாலும் அவர்களை அடையாளம் காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது இத்தகைய #MeToo புரட்சி.
இந்நிலையில், அரசியல்-சினிமா-அதிகாரம்-பணம்-படை-சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றில் உச்சாணிக் கொம்பில் நின்று கோலோச்சுபவர்கள் பெண்களுக்கு கொடுக்கும் புகார்கள் சாமானியர்களுக்கு நீதி வழங்காததால், இப்படி சமூக வலைதளங்களில் அடையாளப்படுத்தும் முயற்சியில் பலரும் இறங்கி வருகின்றனர். எனினும் இவை எல்லாம் அலுவல் ரீதியான அல்லது சட்ட ரீதியான புகார்களாக ஏற்புடையவை அல்ல என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
இதே நிலைதான் உலகம் முழுவதும் என்பதால், இந்தியாவை பொறுத்தவரை, இதுபோன்ற #MeToo ஹேஷ்டேகின் கீழ் பதிவிடப்படும் புகார்களை கண்காணித்து, பாலியல் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் வழிசெய்யும் வகையில் இதற்கென ஒரு கண்காணிப்புக் குழு ஒன்றை மத்திய அரசு தனியாகவே உருவாக்கி அமைத்துள்ளது.