MIC Anthem Mobile BNS Banner
'தமிழை' வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது: மத்திய அரசு

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என கடந்த 2006-ம் ஆண்டில், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்நிலையில், சசிகலா புஷ்பா எம்.பி இதுதொடர்பான கேள்வியை இன்று மாநிலங்களவையில் எழுப்பினார்.

 

எம்.பி சசிகலா புஷ்பாவின் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி எழுத்துப்பூர்வ பதில் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-


தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க முடியாது என கடந்த 11.10. 2012-ல் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த முடிவை எடுத்துள்ளது.

 

தமிழை வழக்காடு மொழியாக ஏற்பதில்லை என 1999, 2007-ம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியவில்லை.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories