
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை மேலும் மூன்று நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தை ஆஜர்படுத்திய சிபிஐ போலீசார், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஐந்து நாட்கள் காவலில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காததால், மேலும் 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என முறையிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை மேலும் மூன்று நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
BY SATHEESH | MAR 6, 2018 5:43 PM #KARTICHIDAMBARAM #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories