ஐபிஎல் 2019: தடை முடிந்தாலும்...'இந்த வீரர்களால்' தங்கள் அணிக்காக விளையாட முடியாதா?
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 16, 2018 03:55 PM
2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள், என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்கள் உலக முழுவதும் மிக பிரபலம்.இதற்காக பல நாட்டை சேர்ந்த வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டார்கள்.இந்நிலையில் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள், ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 'உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே 30-ம் தேதி தொடங்கவுள்ளது.அதற்கு முன்னதாகவே ஐபிஎல் போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் ஐபிஎல் போட்டி யில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் பங் கேற்க முடியாத நிலை ஏற்படும்.அதே நேரத்தில் நடப்பு உலகக் கோப்பை சாம்பியன் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பை போட்டிதான் முக்கியம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.
எனவே உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 வீரர்கள், ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை உள்ளது,என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.