டெல்லி மரணத்தில் 'திடுக்கிடும்' மர்மங்கள்.. வீட்டின் பின்புறத்தில் அதிர்ச்சி!
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 02, 2018 08:29 PM

டெல்லியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகத் தொங்கிய 11 பேர் கண்டெடுக்கப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் தற்போது மேலும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன.
அவர்கள் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றிய டைரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் வீட்டின் சுவர்களில் சில விசித்திரமான தடயங்கள் போலீசாருக்குக் கிடைத்துள்ளன. மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்துள்ளன. ஆனால் அந்த குழாய்கள் உள்ளே எதனுடனும் இணைக்கப்படவில்லை.
அதேபோல வெளியேயும் எதனுடனும் இணைக்கப்படவில்லை. எல்லோரும் இறந்த கிடந்த அறைக்கு வெளியில் இந்த குழாய்கள் தொடங்கி வெளிப்பக்கம் வரை வந்துள்ளது.இதனால் அந்த குழாய்கள் எதற்காக அமைக்கப்பட்டன? என்பது புதிராகவே உள்ளது. இதில் 4குழாய்கள் நேராகவும், 7 குழாய்கள் சற்று வளைந்தும் அமைக்கப்பட்டுள்ளன.
இறந்து கிடந்தவர்களில் நான்கு பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இறந்த 6 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அதில், அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
