‘என்னது? இதையெல்லாம் ஒலிம்பிக்ல சேக்க போறாங்களா?’.. குஷியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Selvakumar | Feb 22, 2019 01:17 PM
வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் புதிதாக ப்ரேக் டான்ஸ் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பான் டோக்யோ நகரில் வரும் 2020 -ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டியில் சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங், ஸ்கேட் போர்டிங், மற்றும் ப்ரேக் டான்ஸ் போன்ற போட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒலிம்பிக் போட்டியை ஒருங்கிணைக்கும் குழு புதிய போட்டிகள் குறித்த பரிந்துரையை அளித்துள்ளது. தற்போது உள்ள 28 போட்டிகளுடன் கூடுதலாக இந்த நான்கு போட்டிகளும் இணைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதில் புதிதாக உள்ள நான்கு போட்டிகளில் ப்ரேக் டான்ஸ் போட்டியைத் தவிர மற்ற மூன்று போட்டிகளும் வரும் 2020 -ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்குவாஷ் விளையாட்டும் ஒலிம்பிக்கில் இடம்பெற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மேலும் 2024 -ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் ப்ரேக் டான்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் இந்த போட்டிகளை இணைப்பது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இதுவரை எந்த விதமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.