கேரளா பேரிடர்.. தன் குடும்பத்தை மீட்டு நெகிழவைத்த நாய்!

Home > News Shots > தமிழ்

By |
Brave pet dog saves its family from disaster in Kerala

குளிர் நகரமான கேரளாவில் எப்போதும் மிதமான அளவில்தான் மழை பொழியும். ஆனால் இம்முறை கேரளாவே மிதக்கும் அளவில் மழை பொழிந்ததால், பெருமளவில் வெள்ளத்தால் கேரள மக்கள் 37 மக்கள் உயிரையும், 35 ஆயிரம் பேருக்கும் மேலான மக்கள் உடமைகளையும் இழந்துள்ளனர். மத்திய அரசு தொடங்கி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களும் நிதி உதவி அளித்து வருகின்றன. 

 

பழைய தமிழ் சினிமாக்களில் தேவர் பிலிம்ஸ் மிகவும் பிரபலம். அந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெரும்பாலான படங்களில் நாய், குரங்கு உள்ளிட்டவை மனிதர்களுடன் இயல்பாக உறவாடும் காட்சிகள் புல்லரிக்க வைப்பபன. இதே பாணியில் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சொந்த வாழ்விடத்தையும் இழந்து, கவலைக்கிடமான நிலையில் இருக்கும் கேரளாவில் மனித நேயத்தை பறை சாற்றும் ஒரு சம்பவத்தை ஒரு வளர்ப்பு நாய் அரங்கேறியுள்ளது. 

 

கேரளாவின் இடுக்கி அணை திறந்துவிடப்பட்டதுதான் கேரளாவின் வெள்ளத்துக்கு இன்னொரு முக்கிய காரணம் என்னும் நிலையில், அப்பகுதியின் கஞ்சுக்குழையை  சேர்ந்த மோகனன் என்பவரது  வளர்ப்பு நாய் ’ராக்கி’, தன்னை வளர்க்கும் குடும்பத்தாரை காப்பாற்றிய நெகிழ்வான சம்பவம் பலரையும் உருகச் செய்துள்ளது.

 

அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, ராக்கிக்கு ஒரு நில அதிர்வு தென்பட்டது. அதன் காரணமாக விடியற்காலை 3.30 மணி அளவில் தொடர்ச்சியாக கத்திக்கொண்டே வந்திருக்கிறது. இதைக் கேட்டதும், படபடப்புடன் எதையோ உணர்ந்தாற்போல், தன் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியில் வந்துள்ளார் ராக்கியின் உரிமையாளர் மோகனன்.

 

வெளியே வந்ததும் அவர்களின் வீடு இடிந்து விழுந்துள்ளது. இருப்பினும் அதே வீட்டின் மேல்பகுதியில் இருந்த தம்பதியனரை காப்பாற்ற முடியவில்லை. ஆனாலும் இதைப் பார்த்து திகைத்துப்போன மோகனன், தன் குடும்பத்தையே பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற முயற்சித்த ராக்கியின் செயலைக் கண்டு நெகிழ்ந்து என்.டி.டிவியிடம் பகிர்ந்துள்ளார்.

 

தன்னை வளர்க்கும் குடும்பத்தாரிடம் இத்தனை அன்பையும் விசுவாசத்தையும் காட்டும், ராக்கி என்ற இந்த  செல்லப் பிராணியை பற்றி கேள்விப்பட்ட அனைவரும் ஆச்சரியத்தில் உறைகின்றனர். #ராக்கிங்’ராக்கி’!

Tags : #KERALA #KERALAFLOOD #ROCKYROCKS