
பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக, இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது சமி மீது அவரது மனைவி பரபரப்பான குற்றச்சாட்டினை வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கும், ஹாசின் ஜஹான் என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், தமது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தம்மை அடித்துத் துன்புறுத்தியதாகவும் ஹாசின் ஜஹான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மனைவியின் இந்த குற்றச்சாட்டுக்கு, கிரிக்கெட் வீரர் முகம்மது சமி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | MAR 7, 2018 1:01 PM #CRICKET #MOHAMMADSHAMI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories